LATEST NEWS
“ஊழல்னு சொன்னாலே ஏன் இவ்வளோ கோபம் வருது..? எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் முடியாததை விஜய் செய்துவிட்டார்..!” எதிர்க்கட்சிகளை அலறவிட்ட அமைச்சர் நிர்மல்குமார்..!!
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், நடந்து முடிந்த தேர்தலில் திமுகவை மக்களே பழிவாங்கி விட்டனர் என்றும், அவர்களை நாங்கள் ஏன் தனியாக பழிவாங்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். இத்தனை ஆண்டுகளில் நீங்கள் என்னென்ன கொள்ளை அடித்தீர்கள், என்னென்ன செய்தீர்கள் என்பதைப் பார்த்த மக்களே உங்களைத் தூக்கி வெளியில் போட்டு விட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தீய சக்தி திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கூறி அதற்காகத்தான் அதிமுக என்ற கட்சியையே தொடங்கினர் என்றும், ஆனால் தற்போது திமுகவை விஜய் ஒழித்துக் கட்டி விட்டார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இனிமேல் அறிவாலயத்தை வெள்ளையடித்து வாடகைக்குத்தான் விட வேண்டும் என்றும், முரசொலி அறக்கட்டளைக்குத்தான் அவர்களுக்குள் இவ்வளவு போட்டி நடப்பதாகவும், அதில்தான் சொத்துகள் அனைத்தும் உள்ளன என்றும் அவர் பேசினார்.
அந்த அறக்கட்டளையை எந்த குடும்பம் கைப்பற்றுகிறது என்பதுதான் அங்கு போட்டியாக உள்ளது என்றும், இன்னும் 2 ஆண்டுகளில் அறக்கட்டளையைக் கைப்பற்றிவிட்டு அறிவாலயத்தை வாடகைக்கு விட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்கச் சென்று விடுவர் என்றும் சாடினார். தொடர்ந்து பேசிய அவர், இது மக்களுக்கான அரசு என்றும், ஒவ்வோர் ஆண்டும் உங்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும் என்றும் உறுதியளித்தார். அத்துடன் வரும் 5 ஆண்டுகளில் நிச்சயமாக ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவோம் எனக் கூறிய அவர், எதிர்க்கட்சியினருக்கு ஊழல், கட்சி நிதி என்று கூறினாலே கோபம் வருகிறது என்றும் தெரிவித்தார்.
