ஒரே ஒரு பார்வை… பறிபோன ரூ.15,000 ரொக்கம்..! “கொன்னுடுவோம்டி” என மிரட்டி வழிப்பறி செய்த பயங்கரம்…! கல்யாணி நகரில் நடுரோட்டில் போன் பேசிய நபருக்கு நேர்ந்த பகீர்… 87 சிசிடிவி கேமராக்களை அலசித் தூக்கிய பூனே போலீஸ்..!! – cinefeeds
Connect with us

CRIME

ஒரே ஒரு பார்வை… பறிபோன ரூ.15,000 ரொக்கம்..! “கொன்னுடுவோம்டி” என மிரட்டி வழிப்பறி செய்த பயங்கரம்…! கல்யாணி நகரில் நடுரோட்டில் போன் பேசிய நபருக்கு நேர்ந்த பகீர்… 87 சிசிடிவி கேமராக்களை அலசித் தூக்கிய பூனே போலீஸ்..!!

Published

on

பூனே நகரின் கல்யாணி நகர் பகுதியில், சாலையோரமாக நின்றுகொண்டு போனில் பேசிக்கொண்டிருந்த நபரை மிரட்டி ரூ.15,000 பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். ஆகஸ்ட் 19 அன்று நடைபெற்ற இச்சம்பவத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள், பாதிக்கப்பட்டவரிடம் சென்று “ஏன் எங்களை முறைத்துப் பார்க்கிறாய்?” என்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் தீவிரமடைந்ததை அடுத்து, அவரைக்கொலை செய்துவிடுவதாக மிரட்டி, அவரது பாக்கெட்டிலிருந்த ரூ.15,000 ரொக்கப் பணத்தைப் பலவந்தமாகப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் ஏரவாடா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் கொள்ளைச் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கினர். சம்பவம் நடந்த இடத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பொருத்தப்பட்டிருந்த சுமார் 87 சிசிடிவி கேமரா காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். அந்த வீடியோ ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு மூலம் குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்தனர். இந்த ஆய்வின் முடிவில், சந்தேகத்திற்குரிய நபர்கள் ஹடப்சர் பகுதியில் வசித்து வருவதும், அவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே ஹடப்சர் காவல் நிலையத்தில் குற்றப் பின்னணி இருப்பதும் தெரியவந்தது.

Advertisement

ரகசியத் தகவலின் அடிப்படையில் ஏரவாடா போலீசார், ஹடப்சர் காவல்துறையினரின் உதவியுடன் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நிகில் (எ) தாத்யா சஷிகாந்த் காம்ப்ளே மற்றும் அயான் நசீர் ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கல்யாணி நகரில் நபரை மிரட்டி ரூ.15,000 பறித்த குற்றத்தை இருவரும் ஒப்புக்கொண்டதாகப் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஏரவாடா போலீசார் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in