CRIME
“அவள் குடலை உருவி பையில் போட்டதைப் பார்த்தேன்” 35 செ.மீ வெட்டப்பட்ட வயிறு, 3 கத்திகள் கிடந்தது… தம்பதியின் அலறல் சத்தம் கேட்டுச் சென்ற வீட்டு உரிமையாளர் கண்ட திடுக்கிடும் காட்சி.. பகீர் சம்பவம்..!!!
ஹரியானாவின் குருக்ஷேத்ரா அருகே உள்ள பெஹோவா சாலையில் ராஜ் பேலஸ் பகுதி வாடகை வீட்டில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தண்ணீர் விநியோகஸ்தரான ராஜேஷ் (40) என்பவரைக் கொன்று, அவரது வயிற்றை 35 செ.மீ நீளத்திற்கு வெட்டி, குடல்களை வெளியே எடுத்த கொடூரச் செயலை அவரது மனைவி விமலா தேவி செய்துள்ளார்.
மாலை 5 மணியளவில் வீட்டிற்குள் கத்து கூச்சல் சத்தம் கேட்டு உரிமையாளர் சென்று பார்த்துள்ளார். அப்போது ராஜேஷ் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும், விமலா அவரது குடல்களை ஒரு பையில் அடைத்துக் கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டு உரிமையாளரைப் பார்த்ததும் பீதியடைந்த விமலா, உடனடியாக வீட்டின் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த விமலாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்திலிருந்து வெவ்வேறு அளவிலான 3 கத்திகளைப் பறிமுதல் செய்த தடயவியல் குழுவினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமலாவிடம் வாக்குமூலம் பெற காவல்துறை முயற்சித்து வருகிறது.
கொலை செய்யப்பட்ட ராஜேஷ் – விமலா தம்பதியினருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், விமலாவுக்குச் சாமி ஆடுதல் மற்றும் பேயோட்டும் வழக்கங்கள் இருந்ததாக வீட்டு உரிமையாளர் கூறியுள்ளதால், இந்த கொடூரக் கொலைக்குப் பின்னணியில் மூடநம்பிக்கை காரணமாக இருக்குமோ என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகிறது.
