நெஞ்சை உலுக்கும் கொடூரம்..! 14 வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… வீடியோ எடுத்து மிரட்டிய 5 பேர் கைது..!! – cinefeeds
Connect with us

CRIME

நெஞ்சை உலுக்கும் கொடூரம்..! 14 வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… வீடியோ எடுத்து மிரட்டிய 5 பேர் கைது..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், 14 வயது பள்ளி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்த வழக்கில் ஒரு சிறுவன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முதலில் நிக்கில் சிங் ராஜ்புத் என்ற நபர் அந்தச் சிறுமியிடம் நட்பு பூண்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, அதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை வைத்து சிறுமியை மிரட்டி வந்த நிலையில், அவரது நண்பர்களான சந்தீப் சிங் சவுகான், பிரசாந்த் படேல், சௌரப் சிங் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் சிறுமியை காரில் கடத்திச் சென்று பாழடைந்த இடங்களில் வைத்து தொடர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

Advertisement

தொடர் சித்திரவதையால் பாதிக்கப்பட்ட சிறுமி, தைரியத்தை வரவழைத்துத் தன் தாயிடம் நடந்த சம்பவங்களைக் கூறியதைத் தொடர்ந்து, ஷாபுரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் போக்ஸோ மற்றும் பிற சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் கைது செய்ததுடன், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார், மொபைல் போன்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in