“ஐயோ கடவுளே.. அடங்காத காம இச்சையில் முன்னாள் கணவன் செய்த கொடூரம்..!” வீட்டின் கதவை உடைத்த போலீஸாருக்குக் காத்திருந்த நரகக் காட்சி.. குலை நடுங்க வைக்கும் பிண்ணனி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ கடவுளே.. அடங்காத காம இச்சையில் முன்னாள் கணவன் செய்த கொடூரம்..!” வீட்டின் கதவை உடைத்த போலீஸாருக்குக் காத்திருந்த நரகக் காட்சி.. குலை நடுங்க வைக்கும் பிண்ணனி..!!

Published

on

பிரேசிலின் ஆகுவாஸ் லிண்டாஸ் டி கோயாஸ் நகரில், 24 வயது இளம் பெண் செவிலியரான எமிலியானே தமாரா நூன்ஸ் கார்வாலோ என்பவரை அவரது முன்னாள் கணவர் கொடூரமாகக் கடத்திச் சென்று, 5 நாட்களாகக் கட்டிலில் சங்கிலியால் பிணைத்து வாயைக் கட்டிப் பாலியல் வன்கொடுமை செய்த நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது இரண்டு குழந்தைகளைப் பற்றிப் பேசுவதற்காகத் தனது முன்னாள் கணவரான அய்ல்டன் ரோட்ரிக்ஸ் டி சௌசாவைச் சந்திக்கச் சென்றபோது, அந்தப் பெண் கடந்த ஆகஸ்ட் 17 அன்று மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். ஆனால், அந்தப் பாவி எமிலியானேவைத் தாக்கி, ஒரு சிறிய பதுங்குமிடத்திற்கு கடத்திச் சென்று, கைவிலங்குகள் மற்றும் சங்கிலிகளால் கட்டிப்போட்டு, தொடர்ந்து போதைப்பொருள் ஊசிகளைச் செலுத்தித் தனது அடங்காத காம இச்சைக்குப் பயன்படுத்தியது இராணுவக் காவல்துறையினரின் அதிரடி சோதனையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஒரு பாழடைந்த வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போலீஸார், ஆக்சிஜன் பற்றாக்குறையோடு, முகத்தில் வாயு முகமூடியுடன் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த எமிலியானேவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பார்க்கும்போது, அந்தப் பெண்ணை இன்னும் பல நாட்களுக்கு அங்கேயே சிறைவைத்துச் சித்திரவதை செய்ய அவனது முன்னாள் கணவன் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அந்த மிருகத்தனமான முன்னாள் கணவரைக் கைது செய்த போலீஸார், அவர் மீது ஆட்கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் சட்டவிரோத சிறைவைப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரேசிலில் அரங்கேறி மாலைமுரசு (Malaimurasu) இணையதளத்தில் வெளியான இந்த அதிர்ச்சியூட்டும் சர்வதேசக் கிரைம் வீடியோ, தற்போது உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பையும் பதைபதைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in