அடப்பாவிங்களா..! டாக்டரே இப்படி பண்ணா யார நம்புறது… DNA பட பாணியில் கொடூரம்..? மருத்துவமனை கட்டணம் செலுத்த முடியாததால் பிஞ்சுக் குழந்தையை விற்ற தாய்..! இடைத்தரகர்கள், மருத்துவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..!! – cinefeeds
Connect with us

CRIME

அடப்பாவிங்களா..! டாக்டரே இப்படி பண்ணா யார நம்புறது… DNA பட பாணியில் கொடூரம்..? மருத்துவமனை கட்டணம் செலுத்த முடியாததால் பிஞ்சுக் குழந்தையை விற்ற தாய்..! இடைத்தரகர்கள், மருத்துவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..!!

Published

on

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணிற்கு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவரை பிரிந்து வறுமையில் வாடி வந்த பவித்ராவால், மருத்துவமனையின் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட ஆண்டாள், தனலட்சுமி ஆகிய இடைத்தரகர்கள் மற்றும் மருத்துவர் ஆகியோர் குழந்தையை விற்கும்படி பவித்ராவை வற்புறுத்தியுள்ளனர்.

இடைத்தரகர்களின் ஆசை வார்த்தைகளில் விழுந்த தாய், பிறந்து 2 நாட்களே ஆன தனது பச்சிளம் குழந்தையை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார். இந்த சட்டவிரோத செயலுக்கு அந்த தனியார் மருத்துவமனையின் மருத்துவரும் உடந்தையாக இருந்ததாகத் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ரகசிய தகவல் அறிந்த வில்லிவாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், குழந்தை கடத்தல் மற்றும் சட்டவிரோத தத்தெடுப்பு தடுப்புச் சட்டங்களின் கீழ், குழந்தையின் தாய் பவித்ரா, இடைத்தரகர்கள் 2 பெண்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர் என 4 பேர் மீது 6 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

இந்த சட்டவிரோத குழந்தை விற்பனை நெட்வொர்க்கில் வேறு பெரிய கும்பலுக்குத் தொடர்பு உள்ளதா, குழந்தை தற்பொழுது யாரிடம் விற்கப்பட்டுள்ளது? என்பது குறித்து வில்லிவாக்கம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மீட்கப்படும் குழந்தையைக் குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்து, காப்பக பாதுகாப்பில் வளர்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in