CRIME
“என்கிட்ட உன் ஆட்டம் செல்லாது..!” ஜாமீனில் வந்த26 வயது ரவுடியை நுழைவு வாயிலிலேயே வெட்டிச் சாய்த்த துணிச்சல்காரப் பெண்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தன் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்து தினமும் தனக்குத் தொல்லை கொடுத்து வந்த தங்க முனீஸ்வரன் (26) என்ற ரவுடி வாலிபரை, மருதாயி (38) என்ற பெண் திட்டமிட்டுத் தனது வீட்டிற்கு வரவழைத்துக் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவி அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி விஜயலட்சுமி காலனியைச் சேர்ந்த மருதாயியின் வீட்டிற்குள் கடந்த மே மாதம் புகுந்து, தங்கத்தோடு மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் தங்க முனீஸ்வரன் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் சிறையிலடைத்திருந்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த தங்க முனீஸ்வரன், காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டுத் தன்னை காட்டிக்கொடுத்த மருதாயியின் வீட்டிற்குத் தினமும் சென்று அநாகரிக அராஜகமான முறையில் மிரட்டிப் ரகளை செய்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மருதாயி தங்க முனீஸ்வரனைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் எனத் தனது வீட்டிற்கு வரவழைத்து, வீட்டின் நுழைவு வாயிலிலேயே அவனது கண்களில் காரசாரமாக மிளகாய்ப் பொடியைத் தூவி, தன்நிலை தடுமாறியவனின் கழுத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீஸ் டிஎஸ்பி குருசாமி தலைமையிலான தனிப்படையினர், இரத்த வெள்ளத்தில் கிடந்த தங்க முனீஸ்வரனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொடூரப் பழிவாங்கல் கொலை தொடர்பாகக் கொலையாளி மருதாயி, அவரது 16 வயது மகன் மற்றும் உறவுக்காரப் பெண் ஆகிய 3 பேரை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்று காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
