“அய்யோ என் மகனை நானே கொன்னுட்டேனே..!” 18 மாத குழந்தையின் சடலத்தைப் பார்த்து கதறித் துடித்த தந்தை… நெட்டிசன்களை கண்கலங்க வைத்த வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“அய்யோ என் மகனை நானே கொன்னுட்டேனே..!” 18 மாத குழந்தையின் சடலத்தைப் பார்த்து கதறித் துடித்த தந்தை… நெட்டிசன்களை கண்கலங்க வைத்த வீடியோ..!!

Published

on

துருக்கியின் அந்தல்யா மாகாணம் செரிக் மாவட்டத்தில், தந்தையின் கவனக்குறைவால் நிகழ்ந்த கோர விபத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை யாகூப் எமிர் ஷாஹின் பரிதாபமாக உயிரிழந்தான். தந்தை ஓட்டி வந்த நிறுவன மினிபஸ் எதிர்பாராதவிதமாக அந்தக் குழந்தையின் மீது ஏறியதில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டபோது, மருத்துவமனை வளாகமே கண்ணீர்க் கடலில் மூழ்கியது.

https://twitter.com/tv100/status/2093617148488974756/video/1

Advertisement

தங்கள் சொந்தக் குழந்தையின் உடலை மார்ச்சுவரியிலிருந்து பெற்றுக் கொண்ட தாயும் தந்தையும், தாங்க முடியாத துயரத்தால் கதறி அழுது சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். தனது சொந்தக் கவனக்குறைவே மகனின் மரணத்திற்குக் காரணமாகிவிட்டதே என்று அந்தத் தந்தை கண்ணீர் விட்டு அழுதது பார்ப்போரின் நெஞ்சங்களை உலுக்கியது. உயிரிழந்த சிறுவன் யாகூப்பின் உடல், கெபிஸ் பகுதியில் உள்ள மத்திய மயானத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in