“என் மனைவி ஆஸ்பத்திரில இருக்காங்க சார்… ஒரே ஒரு ஆர்டர் மட்டும் குடுத்துட்டு வந்திடுறேன்…” கதறிய டெலிவரி பாய்… இரக்கமின்றி பைக்கை தூக்கிய ஹைதராபாத் போலீஸ்..! இணையத்தில் குவியும் கண்டனங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் மனைவி ஆஸ்பத்திரில இருக்காங்க சார்… ஒரே ஒரு ஆர்டர் மட்டும் குடுத்துட்டு வந்திடுறேன்…” கதறிய டெலிவரி பாய்… இரக்கமின்றி பைக்கை தூக்கிய ஹைதராபாத் போலீஸ்..! இணையத்தில் குவியும் கண்டனங்கள்..!!

Published

on

ஹைதராபாத்தில் ‘ஜெப்டோ’ நிறுவனத்தில் பணிபுரியும் டெலிவரி ஊழியரின் மோட்டார் சைக்கிளைப் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று, வாடிக்கையாளரின் ஆர்டரை வழங்குவதற்காக அந்த ஊழியர் தனது பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு கட்டிடத்திற்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த போக்குவரத்துப் பிரிவு டோயிங் வாகனம், அவரது பைக்கை கரேனில் ஏற்றத் தொடங்கியது. இதைப் பார்த்ததும் ஓடிவந்த அந்த ஊழியர், தன் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, ஆர்டரை மட்டும் வழங்கிவிட்டு வர அனுமதிக்குமாறு போக்குவரத்து போலீசாரிடம் கையெடுத்துக் கும்பிட்டுப் பலமுறை வேண்டிக்கேட்டுக் கதறியுள்ளார்.

இருப்பினும், அவரது கவலையையோ அல்லது அவசர நிலையையோ கொஞ்சமும் பொருட்படுத்தாத போலீசார், வாகனத்தை விடுவிக்க மறுத்துவிட்டனர். அபராதம் செலுத்துவதற்காகக் காவல் நிலையத்திற்குத்தான் வரவேண்டும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த டெலிவரி ஊழியர், நகர்ந்து கொண்டிருந்த டோயிங் வாகனத்தின் முன்பாக நின்று அதைத் தடுக்க முயன்றார். அப்போது வாகனத்தில் இருந்த போலீஸ்காரர் ஒருவர், கதவைத் திறந்து அவரைப் பலமாகத் தள்ளிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் முழுவதையும் அங்ிருந்த ஒருவர் தனது கைபேசியில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது காட்டுத்தீ போல் பரவியது.

Advertisement

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, போக்குவரத்து காவல்துறையின் இரக்கமற்ற மற்றும் கொடூரமான இந்த நடத்தைக்கு இணையவாசிகளும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விதிமீறல் அல்லது ‘நோ பார்க்கிங்’ பகுதியில் பைக் நிறுத்தப்பட்டிருந்தால் அபராதம் விதிக்கலாமே தவிர, அவசர நிலையிலிருக்கும் ஏழை உழைப்பாளியிடம் இப்படி அராஜகமாக நடந்துகொள்வது முற்றிலும் தவறானது என்று பலரும் கொந்தளித்துள்ளனர். ஏழைகளிடம் மட்டுமே காவல்துறை தனது அதிகாரத்தைக் காட்டுகிறது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இச்சம்பவம் தொடர்பாக ஹைதராபாத் போக்குவரத்து காவல்துறையினரிடமிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in