CRIME
பகீர்..! சிறுமி கொலை வழக்கிற்கு சடாரென கிடைத்த நீதி..! தப்பிக்க முயன்று போலீஸை சுட்ட குற்றவாளி… ஒரே தோட்டாவில் கொடூரனை போட்டுத்தள்ளிய அதிரடிப் படை..!!
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஹல்டோனி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். குடும்பத்தினர் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, தில்பட்டா கிராமத்தைச் சேர்ந்த பல்ராஜ் என்பவர் சிறுமியை அழைத்துச் செல்வதும், பின்னர் சாக்குமூட்டையை எடுத்துக்கொண்டு வயல்வெளியை நோக்கிச் செல்வதும் பதிவாகியிருந்தது. இதையடுத்து பல்ராஜை பிடித்து விசாரித்த போலீசார், வயல்வெளியில் சாக்குமூட்டைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடலைக் கண்டெடுத்தனர்.
சிறுமியை கடத்திக் கொலை செய்ததை ஒப்புக் கொண்ட பல்ராஜ், கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை பார்க் போலீஸ் சோதனைச்சாவடி அருகே உள்ள பசுமைப்பகுதியில் மறைத்து வைத்திருப்பதாகக் கூறினார். இதையடுத்து போலீசார் அவனை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று கத்தியை மீட்க முயன்றனர். அப்போது புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்த பல்ராஜ், போலீசாரை நோக்கிச் சுட்டதில் தலைமை காவலர் ரவி குமார் காயமடைந்தார். இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் பல்ராஜ் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான்.
என்கவுண்டர் தாக்குதலில் காயமடைந்த காவலர் ரவிகுமாருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பல்ராஜிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான காரணம் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தடயவியல் குழுவினர் ஆய்வு செய்து தடயங்களைச் சேகரித்து வருகின்றனர்.
