“அந்த பிஞ்சு குழந்தை என்ன தப்பு பண்ணுச்சி.?” அது யாரையும் ஏமாத்தலையே.. கணவனின் துரோகத்தால் பிறந்த குழந்தையை காப்பகத்தில் வீசிய தாய்.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அந்த பிஞ்சு குழந்தை என்ன தப்பு பண்ணுச்சி.?” அது யாரையும் ஏமாத்தலையே.. கணவனின் துரோகத்தால் பிறந்த குழந்தையை காப்பகத்தில் வீசிய தாய்.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

Published

on

குடும்பத்தின் சம்மதம் கிடைக்காததால், திருமணத்திற்குப் பிறகு புதுமணத் தம்பதியினர் நொய்டாவிற்கு குடிபெயர்ந்தனர். அங்கு கணவன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், சில மாதங்களில் மனைவி கர்ப்பமடைந்தார். ஏழு மாதங்கள் கடந்த நிலையில், தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு கணவர் சொந்த ஊருக்குப் புறப்பட்டார். நாட்களும் வாரங்களும் உருண்டோடினாலும் கணவர் திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி, கணவரின் ஆதார் அட்டையில் இருந்த முகவரியைத் தேடிச் சென்றபோது, அவர் வேறொரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டது தெரியவந்தது. கணவனின் துரோகத்தால் நிலைகுலைந்த அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்து, போலீசார் அந்த ஏமாற்றுக்காரக் கணவரைக் கைது செய்தனர்.

இந்தக் கொடுமைகளுக்கு மத்தியில், கடந்த ஆகஸ்ட் 22 அன்று அந்தப் பெண் ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால், கணவனின் துரோகம் தந்த தீராத வலியாலும், எதிர்காலம் குறித்த பயத்தாலும், பிறந்த சில நாட்களேயான அந்தக் குழந்தையை ஒரு காப்பகத்தில் விட்டுவிட்டு அவர் அங்கிருந்து தனியாக நடந்து சென்றார்.

Advertisement

இங்கு எவ்வித பாவமும் அறியாத அந்தப் பிஞ்சு குழந்தையின் தவறுதான் என்ன? அது யாரையும் ஏமாற்றவில்லை, பொய் கூறவில்லை, எந்தத் துரோகத்தையும் செய்யவில்லை. ஆனால், இந்த உலகத்தில் தன் கண்களைத் திறந்த முதல் கணத்திலேயே, அதற்கு ஒரு தாயின் மடி, தந்தை அரவணைப்பு மற்றும் அன்பான வீடு கிடைக்கவில்லை; மாறாக அனாதை ஆசிரமமே தஞ்சமாக அமைந்ததுதான் காலத்தின் பெருங்கொடுமை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in