நாட்டையே உலுக்கிய கொடூரம்…! பெண்ணின் சதையை உரித்து வினிகர் தடவி.. சென்னை பிரியாணி கொலையின் திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

நாட்டையே உலுக்கிய கொடூரம்…! பெண்ணின் சதையை உரித்து வினிகர் தடவி.. சென்னை பிரியாணி கொலையின் திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

சென்னை கூடுவாஞ்சேரியில் வசித்து வந்த ஹயாத்துன் நிஷா (38) என்ற கர்ப்பிணிப் பெண்ணைக் கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில், மாணிக் உத்தீன் லஸ்கர் (22) மற்றும் அவரது மனைவி பகாபதி மாஜி (21) ஆகியோர் காவல்துறையிடம் அளித்துள்ள வாக்குமூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. தன்னைத் திருமணம் செய்யக் கோரி நிஷா வற்புறுத்தியதால், கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து அவருக்கு உணவில் கொடிய விஷம் கலந்து கொடுத்துக் கொன்றுள்ளனர்.

கொலைக்குப் பின்னர், குற்றவாளிகள் தடயங்களை மறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். கண், காது, மூக்கை யூடியூப் பார்த்து வெட்டி எடுத்துள்ளனர். பின்னர், சதையை தனியாக உரித்து வினிகர், மைதா சேர்த்து பிரியாணி டபராவில் கொதிக்க வைத்துள்ளனர். பின் உடலின் பாகங்களை ஒரு டிராலி சூட்கேசில் அடைத்து, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

Advertisement

இதனைத் தொடர்ந்து, கூடுவாஞ்சேரி காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர். குற்றவாளிகள் இருவரும் ஆன்லைன் மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்து தப்பியோடிய நிலையில், தொழில்நுட்ப உதவியுடன் அவர்களின் இருப்பிடம் கண்டறியப்பட்டது. இறுதியில், அவர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in