CRIME
“FLASH: மம்தா பானர்ஜி குடும்பத்தில் வெடித்த மாபெரும் மரண பூகம்பம்..!” 28 வயது மகள் விபரீத முடிவு… பிர்பூம் இல்லத்தில் அரங்கேறிய கொடூரம்..!!!
மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் சகோதரர் மகள் பிரிஸ்டி முகர்ஜி (28), பிர்பூம் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பிர்பூமின் ராம்பூர்ஹாட் பகுதியில் உள்ள குசும்பா கிராமத்தில் வசித்து வந்த இவர், மம்தா பானர்ஜியின் தாய்சேய் வழி உறவினரும் உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான நிஹார் முகர்ஜியின் மகள் ஆவார். இன்று மதியம் அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறையில் பிரிஸ்டி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என்று காவல்துறையினர் முதற்கட்டமாகச் சந்தேகிக்கும் நிலையில், மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறியத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, பிரிஸ்டி முகர்ஜி கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதற்கான மருத்துவச் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். மேலும், அவர் அண்மைக்காலமாக விவாகரத்து வழக்குகளைச் சந்தித்து வந்ததோடு, ஆசிரியர் பணி நியமன ஊழல்தொடர்பான நீதிமன்ற உத்தரவால் தனது வேலையையும் இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மம்தா பானர்ஜியின் குடும்பத்தில் நிகழ்ந்துள்ள இந்தத் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
