“நள்ளிரவில் வந்த ஐடி வாலிபர்” ஐயோ பாத்துட்டானே.. கணவரைத் தள்ளிவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசக் காரி செய்த கொடூரம்… சேலம் தொழிலதிபர் கொலையில் திடுக்கிடும் தகவல்..!! – cinefeeds
Connect with us

CRIME

“நள்ளிரவில் வந்த ஐடி வாலிபர்” ஐயோ பாத்துட்டானே.. கணவரைத் தள்ளிவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசக் காரி செய்த கொடூரம்… சேலம் தொழிலதிபர் கொலையில் திடுக்கிடும் தகவல்..!!

Published

on

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொழிலதிபர் பூபதி (45) என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி சுஜிதாஸ்ரீ (31) மற்றும் கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜ் ஆகியோரின் திடுக்கிடும் கொலை நாடகம் போலீசாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பூபதி செங்கல், சிமெண்ட் கற்கள் வியாபாரம் செய்து வந்த நிலையில், அவரது மனைவி சுஜிதாஸ்ரீக்குத் திருமணம் ஆகாத வாலிபர்களுடன் கள்ளத்தொடர்பு வைப்பது வழக்கமாக இருந்துள்ளது. இதேபோல எதிர்வீட்டில் வசிக்கும் ஐடி ஊழியரான சந்தோஷ் ராஜ் என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளாக இருந்த கள்ளக்காதலை பூபதி கண்டித்ததால் இந்த கொடூரக் கொலை அரங்கேறியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவு பூபதிக்கும் சுஜிதாஸ்ரீக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், சுஜிதாஸ்ரீ பூபதியை கீழே தள்ளியதில் அவர் மயக்கமடைந்துள்ளார். உடனடியாகத் தனது கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜை வீட்டிற்கு வரவழைத்த சுஜிதாஸ்ரீ, இருவரும் சேர்ந்து பூபதியைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர், கொலையை மறைப்பதற்காகப் பூபதியின் உடலைக் காரின் முன் இருக்கையில் அமர வைத்து ஆட்டுக்காரனூர் சரபங்கா ஆற்றுப் பகுதிக்குக் கொண்டு சென்று காரை நிறுத்தியுள்ளனர்.

Advertisement

அதன்பின் பூபதியின் தங்கையைத் தொடர்புகொண்ட சுஜிதாஸ்ரீ, மகனுக்குக் கயிறு கட்ட ஆற்றுப் பகுதிக்கு வந்தபோது மர்ம நபர்கள் நகையைப் பறித்துக்கொண்டு கணவரைக் கொலை செய்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். ஆனால், காரில் ரத்தக்கறைகளோ அல்லது சுஜிதாஸ்ரீயின் உடலில் காயங்களோ இல்லாததால் சந்தேகமடைந்த போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மை வெளிவந்தது. தற்போது சுஜிதாஸ்ரீயைக் கைது செய்துள்ள போலீசார், கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in