LATEST NEWS
“வயசான காலத்துல இது தேவையா..? 50 வருஷம் கழிச்சு விவாகரத்து கேட்ட 70 வயது பாட்டி..” அதிர்ச்சியில் உறைந்த போலீசார்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹரில் 50 ஆண்டுகளுக்கு மேலாகத் திருமண வாழ்க்கையில் இணைந்திருந்த 75 வயது முதியவரிடமிருந்து அவரது 70 வயது மனைவி விவாகரத்து கோரிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘பாக்பான்’ திரைப்பட கதையைப் போலவே, வயதான காலத்தில் பெற்றோரைப் பராமரிப்பதற்குப் பதிலாக, அவர்களின் நான்கு மகன்களும் பெற்றோரைப் பிரித்து ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொண்டனர். இரு மகன்கள் தாயையும், மற்ற இரு மகன்கள் தந்தையையும் அழைத்துச் சென்றதால், வாழ்க்கையின் இறுதிப் கட்டத்தில் தம்பதியினர் தனித்தனியாக வாழக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு தனித்தனியாக வாழ்ந்ததால், இருவருக்கும் இடையே தொலைபேசி உரையாடல்கள் மற்றும் அவ்வப்போது நடந்த சந்திப்புகளின் போது கருத்து வேறுபாடுகளும் மனக்கசப்புகளும் அதிகரித்தன. இதனால் கோபமடைந்த 70 வயது முதிய பெண்மணி, தன் 75 வயது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி காவல் நிலையத்தின் கதவுகளைத் தட்டினார்.
இந்த விவகாரம் பெண் ஆலோசனை மையத்திற்கு சென்றபோது, இந்த வயதில் விவாகரத்து மனுவைக் கண்டு ஆலோசகர்களும் வியப்படைந்தனர். காவல்துறை மற்றும் ஆலோசகர்கள் இருவரையும் சேர்த்து வைக்க முயன்றபோதிலும், இடைவெளி காரணமாக அவர்களுக்குள் ஏற்பட்ட விரிசல் ஆழமாகிவிட்டதால், இருவருமே மீண்டும் சேர்ந்து வாழ ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியாக, காவல்துறையின் மத்தியஸ்தம் மூலம் கணவர் தன் மனைவிக்கு மாதம் தோறும் ஜீவனாம்சம் வழங்கச் சம்மதித்ததை அடுத்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
