“வாட்ஸ்அப்ல வந்த ஒரே ஒரு போட்டோ… ஓடி வந்து பார்த்த பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… பிஞ்சு குழந்தையோடு தாய் எடுத்த கொடூர முடிவு… பின்னணியில் வெளிவந்த பகீர் உண்மை..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வாட்ஸ்அப்ல வந்த ஒரே ஒரு போட்டோ… ஓடி வந்து பார்த்த பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… பிஞ்சு குழந்தையோடு தாய் எடுத்த கொடூர முடிவு… பின்னணியில் வெளிவந்த பகீர் உண்மை..!!”

Published

on

மத்திய பிரதேசத்தின் பேதுல்  மாவட்டம், முல்தாய் காவல் எல்லைக்கு உட்பட்ட வல்னி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சனா மற்றும் அவரது 15 மாத குழந்தை இத்திகா ஆகிய இருவரின் நிலைமை திடீரென மோசமடைந்தது. உடனடியாக சிகிச்சைக்காக இருவரும் ஆத்னேர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக பாடர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி முதலில் 15 மாதக் குழந்தை இத்திகாவும், சிறிது நேரத்திலேயே தாய் சஞ்சனாவும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்திற்கு முன்பாக சஞ்சனா ஒரு தற்கொலை கடிதத்தை எழுதி, அதன் புகைப்படத்தை தனது தங்கை மற்றும் பெற்றோருக்கு அனுப்பியுள்ளார். கடிதத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக வல்னி கிராமத்திற்கு விரைந்தபோதிலும், அதற்குள் இருவரின் நிலைமையும் கவலைக்கிடமாகி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தனர். திருமண வாழ்க்கையில் சஞ்சனாவிற்கு அவரது மாமியார் மற்றும் அத்தை மாமியார் ஆகியோரால் தொடர்ந்து மனரீதியான சித்திரவதைகள் வழங்கப்பட்டதாகவும், வரதட்சணையாக இருசக்கர வாகனம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் சஞ்சனாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement

தகவல் அறிந்ததும் மாசோத் காவல் சாவடி காவலர்கள் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். சஞ்சனாவை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் அவரது கணவர், மாமியார் மற்றும் அத்தை மாமியார் ஆகிய மூவரையும் காவலர்கள் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறப்பதற்கு முன் சஞ்சனா அனுப்பிய தற்கொலை கடிதம் மற்றும் பெற்றோர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in