CRIME
“என் மூஞ்சிலயே கேக் பூசுவியா…?” நண்பன்னு கூட பாக்காம கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய கொடூரம்.. பிறந்தநாள் பார்ட்டியில் அரங்கேறிய பதறவைக்கும் சம்பவம்..!!
ஜம்முவின் லோயர் ரூப் நகர் அருகே நீரஜ் என்ற இளைஞர் தனது பிறந்தநாளை சகோதரன் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடினார். சாலையோரம் கேக் வெட்டி இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது சமீர் என்ற வாலிபர் நீரஜின் முகத்தில் கேக்கை எடுத்து பூசியுள்ளார். முகத்தில் கேக் பூசியதை விரும்பாத நீரஜ், சமீரை திட்டியுள்ளார்.
இதனால் நண்பர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நீரஜ், நண்பன் என்றும் பார்க்காமல் கூர்மையான ஆயுதம் ஒன்றைக் கொண்டு சமீரை சரமாரியாக தாக்கினார். இதில் சமீர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
இதையடுத்து சக நண்பர்கள் சமீரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சமீரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சமீரை கொன்ற நீரஜ் மற்றும் அவரது சகோதரரை கைதுசெய்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது முகத்தில் கேக் பூசியதால் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
