LATEST NEWS
பள்ளியில் நடந்த பயங்கரம்..! படிக்கட்டில் இருந்து விழுந்த 4-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் பகீர் சிசிடிவி..!!
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் சாத்நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், வர்ணிகா என்ற நான்காம் வகுப்பு மாணவி பள்ளி மெட்டுகளில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நேற்று, பள்ளிப் படிக்கட்டுகளில் இருந்து கீழே இறங்கும்போது அந்தச் சிறுமி எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி முகம் குப்புற விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த சிறுமியை பள்ளி ஊழியர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவி வர்ணிகா, சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சாத்நகர் போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
