“அட கொடுமையே.. செல்போன் பார்த்த தாய்..” ஜன்னல் வழியே தண்டவாளத்தில் விழுந்த 1.5 வயது குழந்தை.. ரயிலில் நடந்த பதறவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அட கொடுமையே.. செல்போன் பார்த்த தாய்..” ஜன்னல் வழியே தண்டவாளத்தில் விழுந்த 1.5 வயது குழந்தை.. ரயிலில் நடந்த பதறவைக்கும் சம்பவம்..!!

Published

on

பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த 26 வயது சஞ்சிதா என்ற பெண், தனது 1.5 வயது பெண் குழந்தையுடன் மும்பை லோகமானிய திலக் முனையத்திற்கு ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்தக் குழந்தை அவசரக்கால ஜன்னல் வழியாகக் கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சிதா தனது குழந்தையைக் கீழ் படுக்கையின் ஓரத்தில் தூங்க வைத்துவிட்டு, தனது அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திடீரென எழுந்த குழந்தை, அவசரக்கால ஜன்னலின் கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றபோது, ரயிலின் பலத்த குலுக்கல் காரணமாக ஜன்னல் வழியாக வெளியே விழுந்துள்ளது; ஆனால், அலைபேசியில் மூழ்கியிருந்த சஞ்சிதாவுக்கு ஆரம்பத்தில் இது தெரியவே இல்லை.

சிறிது நேரத்திற்குப் பிறகு குழந்தை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சஞ்சிதா அலறியதை அடுத்து, ரயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உடனடியாகச் சங்கிலியை இழுத்து ரயில் நிறுத்தப்பட்டது. ரயில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்ததாலும், சுமார் 8 அடி உயரத்தில் இருந்து கூர்மையான கற்கள் நிறைந்த தண்டவாளப் பகுதியில் விழுந்ததாலும் அந்தப் பெண் குழந்தைக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக உயிருக்கு எந்த ஆபத்துமின்றி குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், 70 கி.மீ வேகத்தில் சென்ற ரயிலில் இருந்து விழுந்தும் குழந்தை உயிர் பிழைத்ததை ரயிலில் இருந்த பயணிகள் ஒரு பெரும் ‘அதிசயம்’ என்று கூறி வியக்கின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in