“நீ எனக்கு வேண்டாம்… 10 வருஷ லவ்.. அரசு வேலை கிடைத்ததும் ஜாதி வேறன்னு சொல்லி கழட்டிவிட்ட காதலன்..” மனமுடைந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நீ எனக்கு வேண்டாம்… 10 வருஷ லவ்.. அரசு வேலை கிடைத்ததும் ஜாதி வேறன்னு சொல்லி கழட்டிவிட்ட காதலன்..” மனமுடைந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

Published

on

ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்நூல் நகரின் புத்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண், கோனேகண்ட்லாவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை கடந்த 10 ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். கிருஷ்ணமூர்த்தியும் மஞ்சுளாவைத் தீவிரமாகக் காதலித்து, அவரைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். இதனிடையே, மஞ்சுளா B.Ed முடித்து DSC தேர்வுக்குத் தயாராகி வந்த நிலையில், கிருஷ்ணமூர்த்திக்கு அண்மையில் அரசு ஆசிரியர் பணி கிடைத்தது.

அரசு வேலை கிடைத்தவுடன் கிருஷ்ணமூர்த்தியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டு, மஞ்சுளாவை விட்டு விலகத் தொடங்கினார். மஞ்சுளா திருமணத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அவர் கோபமடைந்தார். இறுதியாக, இருவரது ஜாதியும் வேறு வேறு என்பதால் தன்னைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என கிருஷ்ணமூர்த்தி மறுத்துவிட்டார். காதலனின் இந்த ஏமாற்றத்தால் மனமுடைந்த மஞ்சுளா, தனது எதிர்காலம் இருண்டுவிட்டதாகக் கருதி வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தார்.

Advertisement

மயக்க நிலையில் கிடந்த மஞ்சுளாவைக் கண்ட குடும்பத்தினர் உடனடியாக அவரை கர்நூல் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலின் பெயரால் தனது மகளின் வாழ்க்கையைச் சீரழித்து தற்கொலைக்குத் தூண்டிய கிருஷ்ணமூர்த்திக்குக் கடுமையான தண்டனை வழங்கி, தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என மஞ்சுளாவின் பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in