“அம்மா, அவங்க என்னை…” திருமணமாகி 4 மாதங்களில் ஐடி பெண் இன்ஜினியருக்கு நேர்ந்த கொடூரம்.. மாமியார் குடும்பத்தின் வெறிச்செயல்.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மா, அவங்க என்னை…” திருமணமாகி 4 மாதங்களில் ஐடி பெண் இன்ஜினியருக்கு நேர்ந்த கொடூரம்.. மாமியார் குடும்பத்தின் வெறிச்செயல்.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் புனேவின் உந்த்ரி-வடாச்சிவாடி பகுதியில், திருமணமாகி 4 மாதங்களே ஆன வைஷ்ணவி பிரவீன் ஜரந்தே (23) என்ற இளம் ஐடி பெண் பொறியாளர் வரதட்சணைக் கொடுமை மற்றும் சித்திரவதைகளால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் மே 9-ஆம் தேதி ஓங்கார் சஞ்சய் கிசாரே என்பவருடன் வைஷ்ணவிக்குத் திருமணம் நடந்துள்ளது. இவர்களது திருமணத்திற்காகப் பெண்ணின் வீட்டார் சுமார் ரூ.45 லட்சம் மற்றும் 10 சவரன் தங்கம் வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர். ஆனாலும், திருமணத்திற்குப் பிறகு புது கார் வாங்குவதற்காக மேலும் ரூ.5 லட்சம் கூடுதலாகக் கேட்டு வைஷ்ணவியை அவரது கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோர் உடலளவிலும் மனதளவிலும் கொடூரமாகச் சித்திரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி இரவு வைஷ்ணவி தனது தாயாரைத் தொலைபேசியில் அழைத்து மாமியார் வீட்டில் தனக்குத் தரப்படும் தொல்லைகள் குறித்து அழுதுகொண்டே பேசியுள்ளார்; ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதே இரவிலேயே அவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் வைஷ்ணவியைத் தொடர்பு கொள்ள முடியாததால் பதறியடித்துக் கொண்டு புனேவிற்கு ஓடிவந்த பெற்றோருக்கு அவரது மரணச் செய்திதான் கிடைத்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், கணவர் ஓங்கார் சஞ்சய் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காலேபதல் போலீசார் வரதட்சணைக் கொடுமை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in