CRIME
அடச்சீ..! உதவி செய்யுறன்னு கூட்டிட்டுப் போய்… மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற வழியில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்..!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் அருகே, உடல்நலக் குறைவால் மயக்கமடைந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியில் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மமிதா மொண்டல் மற்றும் அவரது மனைவி சாயந்தி தாஸ் ஆகியோர், அவிநாசிபாளையத்தை அடுத்த குப்பிச்சிபாளையத்தில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வருகின்றனர். அதே நிறுவனத்தில் அவர்களது சொந்த ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ணா மொண்டல் என்பவரும் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 09-ஆம் தேதி இரவு மமிதா மொண்டல் மற்றும் சாயந்தி தாஸ் ஆகியோருக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சாயந்தி தாஸ் திடீரென மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, அவரை ராமகிருஷ்ணா மொண்டல் தனது இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவருக்கு மயக்கம் தெளிந்த நிலையில், காட்டுப் பகுதியில் வைத்து ராமகிருஷ்ணா மொண்டல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சாயந்தி தாஸ் புகார் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்து தப்பி வந்த அவர், நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மமிதா மொண்டல் உடனடியாக அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராமகிருஷ்ணா மொண்டலிடம் விசாரணை நடத்தியதில் குற்றம் உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்; இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
