“திடீரென பாய்ந்து வந்த ஏவுகணை” நள்ளிரவில் சிதறிய உடல்கள், ரத்தத்தில் நனைந்த விமான நிலையம்… இந்தியர் உட்பட 13 பேர் பலி – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திடீரென பாய்ந்து வந்த ஏவுகணை” நள்ளிரவில் சிதறிய உடல்கள், ரத்தத்தில் நனைந்த விமான நிலையம்… இந்தியர் உட்பட 13 பேர் பலி – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு..!!

Published

on

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கோர சம்பவத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு இந்தியர் உட்பட மொத்தம் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 380-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் புனித யாத்திரீகர்கள் படுகாயமடைந்துள்ளதாக சவுதி நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமான நிலைய முனையத்தில் பயணிகள் காத்திருந்தபோது திடீரென ஏவுகணை தாக்கியதால் பெரும் பயமும் பதற்றமும் ஏற்பட்டது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளில், பிரகாசமான வெளிச்சத்துடன் கூரை இடிந்து விழுவதும், மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடுவதும் பதிவாகியுள்ளது. ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்த கொடூர தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். சவுதி அரேபியாவின் தம்மாம் விமான நிலையம் மற்றும் சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனங்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement

இந்த தொடர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, சவுதி அரேபியாவுக்கான பயணங்களின் போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தங்களது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரியாத் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்த சவுதி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சவுதி அரேபியா மற்றும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நிலவி வரும் மோதல் தற்போது பெரும் தீவிரமடைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in