“உங்க காலில் விழுந்து கேட்கிறேன்… தயவுசெஞ்சு ஆர்டரை நிறுத்துங்க சாமி..” தீபாவளிக்கு ஸ்வீட் கேட்டது குத்தமா..? இணையவாசிகளின் சேட்டையால் ஊரைவிட்டே தப்பியோடிய இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்..! வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

“உங்க காலில் விழுந்து கேட்கிறேன்… தயவுசெஞ்சு ஆர்டரை நிறுத்துங்க சாமி..” தீபாவளிக்கு ஸ்வீட் கேட்டது குத்தமா..? இணையவாசிகளின் சேட்டையால் ஊரைவிட்டே தப்பியோடிய இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்..! வைரல் வீடியோ..!!

Published

on

மதுரை சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் வீரமணி, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தனது முகவரியைப் பகிர்ந்து, பின்பற்றுபவர்களிடம் ஸ்வீட்ஸ் அனுப்பும்படி அன்போடு கேட்டிருந்தார். ஆனால், இணையவாசிகளில் சிலர் அதை ஒரு விளையாட்டாக எடுத்துக்கொண்டு, அவரது முகவரிக்கு அமேசான், பிளிப்கார்ட், ஸ்விகி, சொமேட்டோ போன்ற செயலிகள் மூலம் விதவிதமான பொருட்களை ‘கேஷ் ஆன் டெலிவரி’ முறையில் ஆர்டர் செய்து அனுப்பத் தொடங்கினர். ரூ.1.69 லட்சம் மதிப்பிலான தொலைக்காட்சிப் பெட்டி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஸ்மார்ட்போன்கள் மற்றும் உணவுகள் எனப் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அவரது வீட்டைத் தேடி வரத் தொடங்கின.

ஆர்டர் செய்த பொருட்களுக்குப் பணம் செலுத்தவும் முடியாமல், டெலிவரி ஊழியர்களுக்கு OTP வழங்கவும் முடியாமல் வீரமணி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். அரை மணி நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் வந்து குவிந்ததால், அவர் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், “நான் வெறும் ஸ்வீட் பாக்ஸ் மட்டுமே கேட்டேன், தயவுசெய்து உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன், ஆர்டர் செய்வதை நிறுத்துங்கள். டெலிவரி செய்ய வரும் ஊழியர்கள் வெகுதொலைவில் இருந்து வருகிறார்கள், அவர்களிடம் என்னால் திட்டு வாங்க முடியாது, என்னிடம் பணமும் இல்லை” எனக் கைகூப்பி அழுது முறையிட்டார்.

Advertisement

https://www.instagram.com/reel/DeRI-Oxpbbr/?utm_source=ig_web_button_share_sheet

https://www.instagram.com/reel/Deau1NiEwy3/?utm_source=ig_web_button_share_sheet

Advertisement

அவரது உருக்கமான வேண்டுகோளையும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து அலைபேசி எண்கள் பரப்பப்பட்டும், உணவு மற்றும் பிற பொருட்கள் கேஷ் ஆன் டெலிவரியில் அனுப்பப்பட்டும் வந்தன. இதனால் இரவும் பகலும் டெலிவரி ஊழியர்களின் வருகையால் ஏற்பட்ட தொல்லையைத் தாங்க முடியாமல், வீரமணி தனது வீட்டைப் பூட்டிவிட்டு ஊரை விட்டே வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். தற்போது அவர் பேருந்தில் பயணம் செய்வதாகவும், யாரும் தனது முகவரியைக் கண்டுபிடிக்க முடியாது என்றும் கூறி வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், அவரது தொலைபேசி எண்ணும் துண்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in