“இது எனக்கு பிறந்த குழந்தை இல்லை..” 10 வருஷம் கழித்து DNA டெஸ்ட் கேட்ட தந்தை..! ரூ.50,000 அபராதம் விதித்து நீதிமன்றம் கொடுத்த மரண அடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது எனக்கு பிறந்த குழந்தை இல்லை..” 10 வருஷம் கழித்து DNA டெஸ்ட் கேட்ட தந்தை..! ரூ.50,000 அபராதம் விதித்து நீதிமன்றம் கொடுத்த மரண அடி..!!

Published

on

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தனது மனைவிக்கு பிறந்த குழந்தை தனக்கு பிறந்ததல்ல என்றும், எனவே அக்குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கணவர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சமீம் அகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த மனுவானது 10 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

Advertisement

மேலும், டி.என்.ஏ பரிசோதனை செய்வது குழந்தையின் தனியுரிமை, கண்ணியம் மற்றும் அடையாளம் தொடர்பான உரிமைகளைப் பாதிக்கக்கூடும் என்றும், கணவன் – மனைவி இடையேயான பிரச்சினையின் போது குழந்தையை ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதையடுத்து, மனுதாரரான தந்தைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in