CRIME
“கையில தூக்கிட்டுப் போய்…” 10 வயது சிறுமி செய்த பயங்கரம்.. விளையாடிக் கொண்டிருந்த 18 மாத குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. சிசிடிவியில் சிக்கிய நெஞ்சை உறைய வைக்கும் காட்சி..!!
மும்பை கிழக்கு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், 18 மாதக் பச்சிளம் குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தபோது, அதே வளாகத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியால் காற்றோட்டக் குழியில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. அந்த 10 வயது சிறுமி, விளையாடிக்கொண்டிருந்த குழந்தையைத் தனது கைகளால் தூக்கிச் சென்று கட்டிடத்தின் காற்றோட்டக் குழிக்குள் கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. குழந்தை குழிக்குள் விழுந்து உயிரிழந்ததைக் கண்ட பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரை உறைக்கச் செய்யும் வகையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மிகக் குறைந்த வயதுடைய ஒரு சிறுமி, எந்தவித இரக்கமும் இன்றி இதுபோன்ற கொடூரமான செயலில் ஈடுபட்ட விதம் இணையத்தில் நெட்டிசன்களிடையே கடும் விவாதங்களையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. சிறுமிகளின் மனநிலை மற்றும் வளர்ப்பு முறை குறித்த கேள்விகளையும் இந்தச் சம்பவம் சமூகத்தில் எழுப்பியுள்ளது.
