“என் மகளை அடிச்சே கொன்னுட்டான் சார்..!” காதலித்து கரம் பிடித்தவனே காலனான கொடூரம்.. பெற்ற தாயின் நெஞ்சை பிளக்கும் மரண ஓலம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் மகளை அடிச்சே கொன்னுட்டான் சார்..!” காதலித்து கரம் பிடித்தவனே காலனான கொடூரம்.. பெற்ற தாயின் நெஞ்சை பிளக்கும் மரண ஓலம்..!!

Published

on

ஈரோட்டில் காதல் திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர், வரதட்சணை கொடுமையால் கணவனால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கண்ணீருடன் அளித்த பேட்டியில், தங்களது மகள் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட போதிலும், தங்களால் இயன்ற அனைத்து நகைகளையும் போட்டுத்தான் திருமணம் செய்து வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகளிலேயே அவரது கணவர் தொடர்ந்து வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதுடன், மனைவியை வீட்டை விட்டும் துரத்தியுள்ளார்.

பின்னர், தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்ற கணவர், போதைக்கு அடிமையாகி இரவு முழுவதும் நகை மற்றும் பணம் கேட்டுத் தொடர்ந்து கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலின் காரணமாகவே அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வரதட்சணை கொடுமையால் தங்களது மகளைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் அந்தத் தாய், தன் மகளின் மரணத்திற்குக் காரணமானவருக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்து, தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனப் போலிசாரிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in