“ஒரு தட்டு சோறுக்காக இப்படியா..?” போதையில் வந்த மகனின் வெறிச்செயல்… தந்தையின் போட்டோ பிரேமாலேயே தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஒரு தட்டு சோறுக்காக இப்படியா..?” போதையில் வந்த மகனின் வெறிச்செயல்… தந்தையின் போட்டோ பிரேமாலேயே தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, போதைக்கு அடிமையான மகன் ஒருவன் உணவு சமைக்காத ஆத்திரத்தில் தனது பெற்ற தாயையே அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு பகுதியைச் சேர்ந்த 70 வயதான அம்சா என்ற முதியவர், தனது 37 வயது மகன் வினோத்துடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று கடுமையான மதுபோதையில் வீட்டிற்கு வந்த வினோத், தனக்கு உணவு சமைத்து வைக்காதது குறித்து தனது தாய் அம்சாவிடம் பயங்கரமாகத் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்தத் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற வினோத், வீட்டில் இருந்த தனது மறைந்த தந்தையின் புகைப்பட சட்டத்தை எடுத்து தாய் அம்சாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அதிக ரத்தப்போக்கு காரணமாக அம்சா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், அம்சாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, பெற்ற தாயைக் கொலை செய்த பாவி வினோத்தைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in