“காதலை கைவிட மறுத்த மகள்!” – நள்ளிரவில் பெற்ற மகள் என்றும் பாராமல் கழுத்தை நெரித்து கொன்ற தந்தை… விழுப்புரத்தை உலுக்கிய சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“காதலை கைவிட மறுத்த மகள்!” – நள்ளிரவில் பெற்ற மகள் என்றும் பாராமல் கழுத்தை நெரித்து கொன்ற தந்தை… விழுப்புரத்தை உலுக்கிய சம்பவம்..!!

Published

on

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள வி.பரங்கனி கிராமத்தில், காதலைக் கைவிட மறுத்த 10-ஆம் வகுப்பு மாணவியான விகாஷினி (14) என்ற தனது சொந்த மகளையே தந்தை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. லாரி ஓட்டுநரான சிவசாஸ்திரி என்பவரின் மகள், ராணிப்பேட்டையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கிப் படித்தபோது ஒரு வாலிபரைக் காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் தெரிந்து அவரை வானூருக்கு அழைத்து வந்து தந்தை கண்டித்த போதிலும், மாணவி தொடர்ந்து அந்த வாலிபருடன் செல்போனில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாணவியின் தாய் உறவினர் வீட்டுத் துக்க நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த சமயம் பார்த்து, சிவசாஸ்திரி தனது மூத்த மகளை அருகில் உள்ள தம்பி வீட்டிற்குத் தூங்க அனுப்பியுள்ளார். பின்னர் வீட்டில் விகாஷினியிடம் காதலைக் கைவிட்டுவிட்டுப் படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறியுள்ளார். ஆனால், மாணவி தனது காதலில் உறுதியாக இருந்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த சிவசாஸ்திரி, பெற்ற மகள் என்றும் பாராமல் விகாஷினியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தனது தம்பியிடம் மொபைல் மூலம் இந்த விபரத்தைக் கூறிவிட்டு, வானூர் காவல் நிலையத்தில் அவரே நேராகச் சென்று சரணடைந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, தந்தை சிவசாஸ்திரியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in