CRIME
“நீங்க வந்தாதான் கதவை திறப்பேன்..” உலக்கையால் காதல் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.. போலிசுக்கு போன் போட்ட கணவன்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் முரார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தியாகி நகரில், குடும்பத் தகராறு காரணமாக ஆனந்த் என்ற நபர் தனது மனைவி மது ஸ்ரீவஸ்தவாவை அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். தனது கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக மது அன்று ‘கர்வா சௌத்’ நோன்பு இருந்த நிலையில், இந்த விபரீதம் அரங்கேறியுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஆனந்த், மதுவின் கழுத்தை நெரித்ததுடன், வீட்டில் மசாலா அரைக்கப் பயன்படுத்தும் உலக்கையால் அவரது தலையில் பலமுறை கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் மது சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கொலை நடந்த நேரத்தில் குழந்தைகளும், மதுவின் நாத்தனாரும் வீட்டிலிருந்த போதிலும் அவர்களுக்கு அலறல் சத்தம் எதுவும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, கொலையாளி ஆனந்தே காவல்துறைக்குத் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்து, அவர்கள் வந்த பிறகே கதவைத் திறந்து சரணடைந்துள்ளார். ஆனந்த் வேலை இல்லாமல் இருந்ததாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல அடிக்கடி வீட்டில் சண்டை போடுவார் என்றும் அண்டை வீட்டார் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது போலீசார் ஆனந்தைக் கைது செய்து, தடய அறிவியல் துறையினரின் உதவியுடன் இந்த கொடூரக் கொலைக்கான உண்மையான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
