“ஐயோ பாவம்…” பஸ் டிரைவர் பண்ண ஒரு சின்னத் தப்பு… தலைகீழாக மாறிய ஆன்மிகப் பயணம்… கண்ணீரில் தவிக்கும் உறவினர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ பாவம்…” பஸ் டிரைவர் பண்ண ஒரு சின்னத் தப்பு… தலைகீழாக மாறிய ஆன்மிகப் பயணம்… கண்ணீரில் தவிக்கும் உறவினர்கள்..!!

Published

on

பஞ்சாப் மாநிலம் டார்ன் தரன் மாவட்டத்தில் உள்ள நௌஷேரா பன்னுவான் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை விபத்து நேர்ந்துள்ளது. யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஞ்சாபின் ‘முக்கியமந்திரி தீர்த்த யாத்ரா யோஜனா’ திட்டத்தின் கீழ் 2 பேருந்துகளில் மொத்தம் 37 பேர் பயணம் செய்தனர். ஒரு பேருந்து பரிட்கோட்டிலிருந்து அமிர்தசரஸ் நோக்கியும், மற்றொரு பேருந்து அமிர்தசரஸிலிருந்து முக்த்சர் நோக்கியும் சென்று கொண்டிருந்தன.

முதற்கட்ட தகவல்களின்படி, ஒரு இருசக்கர வாகனம் மீது மோதுவதைத் தவிர்க்க முயன்றபோது பேருந்தின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பைத் தாண்டி, எதிர்திசையில் வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளார். விபத்தின் தீவிரத்தினால் இரு பேருந்துகளின் முன்பகுதியும் முற்றிலுமாகச் சேதமடைந்ததுடன், பல பயணிகள் பேருந்துகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

Advertisement

உள்ளூர் மக்கள் உடனடியாக உதவிக்கு விரைந்து வந்து, பேருந்துகளில் சிக்கியவர்களை வெளியே இழுக்கும் மீட்புப் பணியை மேற்கொண்டனர். இந்த விபத்தில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் அமிர்தசரஸுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மேலும் ஒருவர் உயிரிழந்தார் என டார்ன் தரன் மாவட்ட ஆட்சியர் நிர்மல் தெரிவித்தார். காயமடைந்த 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in