LATEST NEWS
மருமகன் இல்லாமல் பிறந்தநாள் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்…. பேரக் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா….!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்துள்ளது. சினிமாவில் கலக்கி வரும் தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதனிடையே சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இந்தச் செய்தியை ரசிகர்கள் மத்தியில் பெயர் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இருந்தாலும் மகன்கள் இருவருமே தனது பெற்றோர்களிடம் அன்பு செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், போயஸ் கார்டனில் இல்லாமல் வெளியில் சென்று உள்ளார். தன்னுடைய அப்பாவின் பிறந்தநாள் அன்று மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் எடுத்துக் கொண்ட ரஜினியின் புகைப்படத்தை வெளியிட்டு அவரின் மகள் ஐஸ்வர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள் பலரும் மருமகன் இல்லாமல் பேரப்பிள்ளைகளுடன் பிறந்தநாள் என கமாண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
