TRENDING
“நெற்றியில் குண்டுடன் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட16 வயது சிறுமியின் சடலம்” .. மீண்டும் ஒரு வன்புணர்வு ?…

பிரியங்காவின் நிலை போன்று மீண்டும்ஒரு கோரா சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.பீஹார் மாநிலம் பக்சர் மாவட்டத்தை சேர்ந்த குக்தா கிராமத்தில், 16 வயது சிறுமியின் சடலம் ஒன்றை எரிந்த நிலையில் போலீசார் மீட்டுள்ளனர். அந்த சிறுமியின் நெற்றியில் குண்டு பாய்ந்துள்ளது. மேலும் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக, உடலை குற்றவாளிகள் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
இதனால் இறந்தது யார்? எந்த ஊர்? என்பது குறித்த விவரங்கள் சரிவர தெரியவில்லை என்றும் இதுகுறித்து தற்போது தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆரம்ப பரிசோதனைக்கு பின்னர் அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளாரா? என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது. தற்போது இதுகுறித்து விசாரிக்க தடவியல் குழு ஒன்றும் மோப்ப நாய் குழுவும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு உள்ளது. மேலும் உடலை அடையாளம் காண அருகில் உள்ள மாவட்டங்களுக்கு இதுகுறித்த தகவல்களை அனுப்பி இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது