LATEST NEWS
அட ராகவா லாரன்ஸின் மகளா இது?.. ஹீரோயினி ரேஞ்சுக்கு இப்படி வளந்துட்டாங்களே… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ராகவா லாரன்ஸ். டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முகத் திறமை கொண்டவராக சினிமாவில் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
முதலில் ரஜினியின் உழைப்பாளி மற்றும் ஜென்டில்மேன் உள்ளிட்ட திரைப்படங்களில் குரூப் டான்ஸராக பணியாற்றினார். அதன் பிறகு முனி திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் இவர் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. சினிமாவை தாண்டி மிகப் பெரிய அளவில் ராகவா லாரன்ஸ் சமூக சேவைகளை செய்து வருகின்றார்.
இவர் லதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ராகவி என்ற ஒரு மகளும் உள்ளார். ராகவா லாரன்ஸின் குடும்ப புகைப்படங்கள் அதிக அளவு இணையத்தில் வெளியானது கிடையாது.
தற்போது லாரன்ஸ் மகள் ராகவி சினிமா ஹீரோயினி போல வளர்ந்து விட்டார். மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த அவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.