TRENDING
‘பிரகாஷ் ராஜ், சிவராஜ் குமார் மன்னிப்பை ஏத்துக்க முடியாது’…! செய்தியாளர்கள் சந்திப்பில் கொந்தளித்த நடிகர் சித்தார்த்…!
தமிழ் சினிமாவின் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சித்தார்த். இவர் தற்பொழுது ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். அவ்வப்பொழுது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகின்றன. இவர் நடிப்பில் தற்பொழுது சித்தா படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்தின் நடிப்புக்கு நல்ல பாராட்டு கிடைத்து வருகிறது.
படத்தை ப்ரோமோஷன் செய்ய சித்தார்த் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் கூட அவர் நடித்து ப்ரொமோஷன் செய்திருக்கிறார். சித்தா பட ப்ரோமோஷனில் பெங்களூரில் நடைபெற்றதை நாம் அனைவரும் அறிவோம். அந்த நிகழ்ச்சியில் திடீரென புகுந்த கன்னட அமைப்பினர் காவேரி பிரச்னை தொடர்பாக கோஷங்கள் எழுப்பி நிகழ்ச்சியை நிறுத்தி சித்தார்த்தை வெளியேற்றினர்.
இதற்கு மன்னிப்பு கோரி கன்னட பிரபல நடிகரான சிவராஜ் குமாரும், பிரகாஷ் ராஜும் மன்னிப்பு கேட்டனர். இந்நிலையில் தற்பொழுது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் சித்தார்த் ‘ சித்தா படம் பற்றி முழுமையாக எடுத்துக் கூறினார். பின்னர் குடும்பமாக சென்று சித்தா படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் , பெங்களுருவில் நடைபெற்ற சம்பவம் இனிமேல் எந்த தயாரிப்பாளருக்கும் நடக்க கூடாது என்றும்,
நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகர் சிவராஜ் குமார் அவர்கள் இருவரும் அந்த சம்பவத்திற்க்காக மன்னிப்பு கேட்டனர். அவர்களின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் இருவருமே எந்த தப்பும் செய்யாதவர்கள். இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க தமிழ் சினிமா சங்கம் பேசி முடிவெடுக்க வேண்டும் ‘ என்று கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…