TRENDING
காஞ்சிபுரம் பட்டு புடவை, கையில் கிரிக்கெட் பேட்…! இது கொஞ்சம் புதுசா இருக்கே…! நடிகை அனிகாவின் கலக்கல் போட்டோஷூட்…!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அனிகா. இவர் ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து நடிகை நயன்தாராவிற்கு இரண்டு முறை மகளாக நடித்துள்ளார். விசுவாசம் திரைப்படம் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் நயன்தாராவின் மகளாக நடித்திருப்பார்.
இதைத் தொடர்ந்து பின் மிருதன், நானும் ரவுடி தான் போன்ற படங்களில் நடித்து அசத்தினார். இவர் தற்பொழுது மலையாளத்தில் உருவாகியுள்ள ‘ஓ மை டார்லிங்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் ஹீரோவுடன் லிப் கிஸ் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்த நடிகை அனிகா இதனால் சர்ச்சைகளிலும் சிக்கினார். இதைத்தொடர்ந்து தெலுங்கில் புட்டபம்மா என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இவர் தற்பொழுது தனுஷ் இயக்கி நடிக்கும் 50 வது படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அனிகா. இவர் நடிகையாக மட்டுமின்றி விளம்பர மாடலாகவும் பணியாற்றி வருகிறார். அநதவகையில் தற்பொழுது இவர் காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்து கிரிக்கெட் பேட்டை கையில் பிடித்தபடி போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.