TRENDING
கவின், லாஸ்லியா திருமணமா..! நிச்சயதார்த்தம் எப்போ….!! புகைப்படத்தல் ஏற்பட்ட சர்ச்சை.?

நடந்து முடிந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா இருவரும் காதலித்து வந்ததாகவும் பிறகு ஏனோ காரணத்திற்க்காக பிரிந்து விட்டனர் என்று செய்திகள் பரவியது நிகழ்ச்சி முடிந்து பல நாட்கள் ஆகியும் இன்றுவரை இருவரும் காதலை பற்றி வாய் திறக்காமல் இருந்து வருகிறார்கள்.
கவின், லாஸ்லியா இருவரின் காதல் விவகாரம் லாஸ்லியாவின் வீட்டில் தெரியவந்த்தை அடுத்து காதல் முறிந்து விட்டது என்று கூறுகிறார்கள் அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்ட காதல் இது அதனால் தன் நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர்கள் காதலும் முடிந்துவிட்டது என்றும் சில பேர் கூறிவருகிறார்கள்.
இன்றுவரை பிக் பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்கள் கவின், லாஸ்லியா இருவரும் காதலித்து வருவதாக நினைக்கிறார்கள். இந்த நிலையில் பட்டு சட்டை, பட்டு வேட்டி அணிந்து கவின் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் என்ன அண்ணே வீட்ல விசேஷமா என்று கமன்ட் செய்துவருகிறார்கள்
மேலும் சிலர் பார்க்க மாப்பிளை போல இருக்கிறீர்கள் மணப்பெண் லாஸ்லியா தானே, எங்க கண்ணே பட்டிடும் போல இருக்கிறது வீட்ல போய் சுத்தி போட்டுக்கோ அண்ணே என்று கூறிவருகிறார்கள்.