TRENDING
தாய், தந்தை அடுத்தடுத்து’… “உயிரிழந்த பரிதாபம் மாற்றுத்திறனாளி” அக்காவுக்காக 15 வயது..! ‘தம்பி செய்த நெகிழ்ச்சி சம்பவம்’…?

அப்பா ,அம்மா என இருவரும் உயிரிழந்த நிலையில், மாற்றுத்திறனாளி அக்காவுக்காக தம்பி செய்த நெகிழ்ச்சி சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
கர்நாடகா : மைசூர் மாவட்டத்தில் உள்ள ஆலனஹள்ளி கிராமத்தை சேர்ந்த தாம்பத்திகள் குமார் மற்றும் மனைவி மஞ்சுளா. இந்த தம்பதியினருக்கு அனுஷா (17) என்ற மகளும், ஆகாஷ் (15) என்ற மகனும் உள்ளனர். இதில் அனுஷா மூளைவளர்ச்சி குன்றியவர். ஆகாஷ் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அப்பா , அம்மா என இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் இரு பிள்ளைகளுக்கு உதவ கூட யாரும் இல்லாமல் ஆதரவற்று நின்றுள்ளனர்.
மேலும் சிறுவன் ஆகாஷ் மூளைவளர்ச்சி குன்றிய அக்காவை வீட்டில் விட்டு விட்டு பள்ளிக்கு சென்று வந்துள்ளார். மாற்று திறனாளி பெண்ணிற்கு உதவ கூட யாரும் இல்லாததால் பசியால் வாடி உள்ளார். பள்ளியில் இருந்து வந்து பார்த்த சிறுவன் அதிர்ச்சிக்குள்ளாகினான் இந்த நிலையில் சிறுவன் தான் பள்ளிக்கு சென்றால் மாற்றுத்திறனாளி அக்காவை சரிவர பார்த்துக்கொள்ள முடியாது என நினைத்து ஆகாஷ் தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.
இந்த தகவலை அறிந்த அப்பகுதி தாசில்தார் விரைந்து ஆலனஹள்ளி கிராமத்துக்கு சென்ற சிறுவன் ஆக்ஷியிடம் ஏன் பள்ளிக்கு போகவில்லை என்று கேட்டறிந்தார். சிறுவன் ஆகாஷ் கூறியது தனது தாய், தந்தை இருவரும் இறந்துவிட்டார்கள், மூளைவளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள எனது அக்காவை கவனிக்க ஆள் இல்லாததால் படிப்பை பாதியில் நிறுத்தி கொண்டேன் என்று கண்கலங்க கூறினார்.
சிறுவன் ஆகாஷ் கதையை கேட்டு அதிர்ச்சியடைந்த தாசில்தார், உடனே மூளைவளர்ச்சி குன்றிய அனுஷாவை பாராமரிக்க மைசூரில் உள்ள கருணாலயத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் கேத்தனஹள்ளியில் உள்ள விடுதியில் ஆகாஷ் தங்கி படிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு சார்பில் ஆகாஷ் மற்றும் அனுஷா ஆகிய இருவருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்படும் என தாசில்தார் உறுதியளித்துள்ளார். மேலும் பலர் தாசில்தார் மஞ்சுநாத்திற்கு வாழ்த்துக்கள் கூறிவருகிறார்கள்.