கர்ப்பிணி மனைவிக்கு தெரியாமல் ஒரே விமானத்தில் சடலமாக கணவர் ஓமனில் நடந்த துயரசம்பவம் – விவரம் இதோ - cinefeeds
Connect with us

TRENDING

கர்ப்பிணி மனைவிக்கு தெரியாமல் ஒரே விமானத்தில் சடலமாக கணவர் ஓமனில் நடந்த துயரசம்பவம் – விவரம் இதோ

Published

on

கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள புத்தியபுரத்தை சேர்ந்தவர் முஹம்மது ஜாகீர்(30) இவருக்கும் ஷிபானா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் ஜாகீர் மனைவியை தன்னுடன் அழைத்துக்கொண்டு ஓமன் நாட்டிற்கு வேளைக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை தன் நண்பர்களுடன் கால்பந்து விளையாடும் போது ஜாகீர் திடீரென மயங்கி சுருண்டு விழுந்துள்ளார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் அவரை உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் துரதிஷ்ட வசமாக செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதனால் அதிர்ந்து போன நண்பர்கள் அவரது மனைவியிடம் சென்று ஜாகீருக்கு கொரோனா தொற்று இங்கு அதிகமாக பரவுகிறது. அதன் காரணமாக அவருக்கும் தொற்றுள்ளது. அதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறோம்.

Advertisement

அதனால் நீங்கள் இங்கே இருக்க வேண்டாம். இந்தியா செல்லுங்கள். என வற்புறுத்தி இருக்கின்றனர். ஷிபானா தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவரது நண்பர்கள் பொய் சொல்லி ஷிபானாவுக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்து இந்தியா அனுப்பி இருக்கின்றனர். வேறு வழியின்றி ஷிபானாவும் இந்தியா கிளம்ப அவருக்கு ஜாகீரின் நண்பர்கள் டிக்கெட் எடுத்துக்கொடுத்து இருக்கின்றனர். இதில் சோகம் என்னவென்றால் ஷிபானா பயணித்த அதே விமானத்தில் அவரது கணவரின் சடலத்தையும் எடுத்து வந்துள்ளனர்.

ஒரு வழியாக ஊருக்கு வந்த பின் இந்த விவரத்தை அவரிடம் சொல்லி இருக்கின்றனர். அதுவரை உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அவரிடம் இந்த உண்மையை மறைத்துள்ளனர். இந்த துயர சம்பவம் ஜாகீரின் உறவினர்கள் மூலமாக தற்போது செய்திகளில் கசிந்துள்ளது. 6 மாதங்களுக்கு முன் கணவருடன் விமானத்தில் பயணித்த பெண், கணவர் இறந்த சம்பவம் தெரியாமல் அதே விமானத்தில் இந்தியா திரும்பிய சம்பவம் அனைவரது மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த துயர சம்பவம் அனைவரின் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in