#image_title

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை பானுப்பிரியா.

இவர் நடிகை என்பதையும் தாண்டி தன்னை ஒரு சிறந்த நடன கலைஞராகவும் காட்டியுள்ளார். 90களில் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் இணைந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

அதே சமயம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து அசத்தியவர்.

இவர் கிட்டதட்ட 150 படங்களுக்கு மேல் நடித்திருந்தும் தற்போதும் தன்னை தேடி வரும் படங்களில் நடித்து வருகின்றார்.

இதனிடையே கடந்த 1998 ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலான இவருக்கு அபிநயா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் பானுப்பிரியா தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

பானுப்பிரியா தமிழில் கடைசியாக பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் பானுப்பிரியா தனக்கு நினைவாற்றல் குறைந்து விட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தனது தற்போதைய நிலை குறித்து பேட்டியளித்த பானுப்பிரியா, என்னுடைய கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்த பின்னர் எனக்கு நினைவாற்றல் மிகவும் குறைந்து விட்டது. எதையும் என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை.

மனமும் வெறுமையாகி விட்டது. கடந்த இரண்டு வருடங்களாக இப்படித்தான் நடக்கிறது. என்னுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டதாக செய்திகள் பரவின.

அது எதுவும் உண்மை இல்லை. தற்போது என் கணவர் உயிருடன் இல்லாததால் அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை.

தான் எப்போதும் முழு நேரமும் வீட்டில் இருப்பதாகவும் புத்தகம் படிப்பது மற்றும் பாட்டு கேட்பது என அப்படியே வீட்டு வேலைகளை செய்து தன்னை பிஸியாக வைத்துக் கொள்வதாகவும் பானுப்பிரியா தெரிவித்துள்ளார்.

அதனைப் போலவே அவரின் ஒரே மகள் அபிநயா தற்போது லண்டனில் பட்டப்படிப்பு படித்து வருவதாகவும் பானுப்பிரியா கூறியுள்ளார். அவரின் இந்த கலங்க வைக்கும் பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.