TRENDING
பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் ஜனனி போட்ட முதல் பதிவு…. என்ன சொல்லி இருக்கார் தெரியுமா….????

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 70 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற கிட்டத்தட்ட 11 போட்டியாளர்கள் வெளியேறி தற்போது பிக் பாஸ் வீட்டில் பத்து போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன. கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்ற ஜனனி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
ஏ டி கே கடைசியில் வெளியேறுவார் என அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ஜனனி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு ஜனனி முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டு உள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க