குணா அவங்க வச்ச பெயர்.. ஆனா நான் சொன்னது..? மஞ்சுமெல் படக்குழுவினரோடு குணா பட நினைவுகளை பகிர்ந்த கமல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

குணா அவங்க வச்ச பெயர்.. ஆனா நான் சொன்னது..? மஞ்சுமெல் படக்குழுவினரோடு குணா பட நினைவுகளை பகிர்ந்த கமல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Published

on

சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான குணா படம் 1991-ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ரோஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவன் தன்னை சிவனாக நினைத்துக் கொண்டு கோவிலுக்கு வரும் ஒரு பெண்ணை பார்வதி என நினைத்து திருமணம் செய்வதற்காக கடத்தி செல்கிறான்.

பின்னர் மலை உச்சியில் இருக்கும் ஒரு வீட்டில் அந்த பெண்ணை அடைத்து வைக்கிறான். ஒரு பக்கம் பெண்ணின் சொத்துக்களை அபகரிக்க நினைக்கும் கூட்டமும், மற்றொரு பக்கம் போலீஸ் அதிகாரிகளும் அந்த பெண்ணை தேடி வருகிறார்கள். இறுதியில் என்ன ஆனது என்பதுதான் கதை. இந்த படத்தில் கமல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். குறிப்பாக குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என்றது என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

Advertisement

இந்த நிலையில் கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் பிப்ரவரி 23-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பறவ பிலிம்ஸ் தயாரிக்க இயக்குனர் சிதம்பரம் இயக்கியுள்ளார். இதில் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட நடிகர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியை பெற்று வசூலை குவித்தது.

இந்நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து குணா படத்தை இயக்கிய அனுபவம் குறித்து பேசி உள்ளனர். அந்த வீடியோவை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் குணா படத்தை எடுத்த குகை மிகவும் ஆபத்தானது. நானும் அங்கிருந்து குரங்குகளின் மண்டை ஓட்டை எடுத்தேன். ஏற்கனவே ஹேராம் படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட குரங்கு மண்டையோடு குணா குகையில் இருந்து எடுத்ததுதான்.

Advertisement

அந்த இடம் மிகவும் ஆபத்தானது என கூறியுள்ளார். குணா படம் எடுக்கப்பட்ட போது நடந்த அனுபவங்கள் குறித்து கமலஹாசன் உரையாடியுள்ளார். முதலில் மதிகெட்டான் சோலை என பெயர் வைக்க வேண்டும் என கமல் கூறினாராம். ஆனால் படக்குழுவினர் அதற்கு மறுப்பு தெரிவித்து குணா என பெயர் வைத்தார்கள் என கமல் தெரிவித்துள்ளார். மேலும் கண்மணி அன்போடு காதலன் பாடல் எனக்கும் இளையராஜாவுக்கும் இடையேயான காதல் கடிதம் தான் என புன் சிரிப்போடு கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in