Uncategorized
காதலனுக்காக” நாடு விட்டு நாடு வந்து”— தமிழ் கலாச்சாரத்துடன் திருமணம் செய்துக்கொண்ட இளம் பெண்..!! மிரண்டு போன உலக நாடுகள்
காதலில் எப்பொழுதும் சாதி,மதம் ஏன் நாடு கூட தடை இல்லை என்பதைப் பல காதலர்கள் பல நேரங்களின் உண்மையாக்கியுள்ளார்கள். அந்த நிலையில் மானாமதுரை இளைஞருக்காக பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் ஒருவர் கடல்கடந்து வந்துள்ள நிகழ்வு பலரையும் நெகிழடைய செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரையில் தயாபுரத்தை சேர்ந்தவர் நிர்வின். எவர் பொறியியல் முடித்த இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி உள்ளார்.இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் பொறியாளர் மேரிஜேன் என்பவரும், அதே நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததால் இருவருக்குள் காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர்…
இவர்கள் இருவரும் உயிருக்குயிராக காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இந்த திருமணத்துக்கு நிர்வினின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தநிலையில், மேரிஜேன் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை . இருப்பினும் நிர்வினின் மீது இருந்த காதலால் அவரை திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்த மேரிஜேன், திருமணத்திற்காகத் தமிழகம் வந்தார்.
இதைதொடர்ந்து தமிழ் காலசாரப்படி தமிழ் கடவுள் முருகப்பெருமானின் திருமண தலமான திருப்பரங்குன்றத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். அங்குள்ள ஒரு மண்டபத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் முன்னிலையில் நேற்று திருமண விழா நடந்தது. மணமகள் மேரிஜேன் பட்டுச் சேலை உடுத்தி இருந்தார். மூக்குத்தியும், காதுகளில் தோடு, ஜிமிக்கியும், காலில் கொலுசும் அணிந்து இருந்தார்…இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியடைய செய்துள்ளது…இந்த செய்தி இணையத்திலும் பரவலாக பரவி வருகிறது…
