தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் கடந்த வருடம் ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இருந்தாலும் தங்களின் இரண்டு பிள்ளைகளுக்காக விவாகரத்து செய்யாமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வாத்தி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் வெங்கி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவில் தனுஷ் தனது மகன்கள் மற்றும் அம்மாவுடன் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தனுஷின் இரண்டாவது மகன் நன்றாக வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.