GALLERY
காதல் மனைவிக்கு பாசமாக ஊட்டி விட்டு.. மாட்டுப்பொங்கல் கொண்டாடிய நகைச்சுவை நடிகர்.. இணையத்தை கலக்கும் போட்டோஸ்…!!

பிரபல நகைச்சுவை நடிகரான ரெடின் கிங்ஸ்லி நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இதனையடுத்து நெற்றிக்கண் டாக்டர், அண்ணாத்த, எதிர்க்கும் துணிந்தவன், பீஸ்ட் ஆகிய படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார்.
இவர் 90-களில் சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். தற்போது வா வரலாம் வா என்ற படத்தில், கங்குவா படத்திலும் ரெடின் கிங்ஸ்லி பிஸியாக நடித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெடின் கிங்ஸ்லி சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சங்கீதா சின்னத்திரை நடிகை ஆவார். இவர் பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி சங்கீதா தம்பதியினர் தைப்பொங்கலை கொண்டாடினர்.
அதன் பிறகு ரெடி தனது மனைவியுடன் மாட்டுப்பொங்கலை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்றும் இது போல இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.