இத்தனை நாளா இதை மறைச்சுட்டீங்களே…! பிரம்மாண்டமாக நடைபெற்ற பிரபல வில்லன் நடிகர் ஹரிஷ் உத்தமன் மனைவியின் வளைகாப்பு…! வெளியான புகைப்படங்கள்…! - cinefeeds
Connect with us

GALLERY

இத்தனை நாளா இதை மறைச்சுட்டீங்களே…! பிரம்மாண்டமாக நடைபெற்ற பிரபல வில்லன் நடிகர் ஹரிஷ் உத்தமன் மனைவியின் வளைகாப்பு…! வெளியான புகைப்படங்கள்…!

Published

on

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஹரிஷ் உத்தமன். ஆரம்பத்தில் இவர் பாராமவுன்ட் ஏர்வேஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனங்களில் 3 ஆண்டுகளாக பணியாற்றினார்.

அதற்குப் பிறகு தான் சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக மீடியாவிற்குள் நுழைந்தார். பின்னர் சூர்யா பிரபாகரன் இயக்கிய தா என்ற தமிழ் படத்தில் நடித்தார். இது தான் இவருடைய முதல் படம். அதே படத்திற்காக நார்வே தமிழ் பட விழாவில் சிறந்த புதுமுக நடிகர் என்ற விருதை பெற்று இருந்தார்.

Advertisement

இதனை தொடர்ந்து இவர் ராதா மோகன் இயக்கத்தில் கௌரவம் என்ற படத்தில் நடித்தார். அதற்கு பிறகு சூரிய பிரபாகரன் இவரை இயக்குனர் சுசீந்திரனிடம் சிபாரிசு செய்தார்.

 

Advertisement

பின் சுசீந்திரன் இயக்கத்தில் விஷாலின் நடிப்பில் வெளிவந்த பாண்டிய நாடு என்ற படத்தில் ஹரிஷ் உத்தமன் வில்லனாக நடித்து இருப்பார். இந்த படத்தின் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து இவர் நாடு, தனி ஒருவன், பாயும் புலி, றெக்க, தொடரி, பைரவா, டோரா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் வில்லனாகவும், துணை நடிகராகவும் மிரட்டி இருக்கிறார்.

Advertisement

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதோடு இவர் தமிழ் படங்களில் பிரபலமாக இருந்தாலும் இவருடைய பூர்வீகம் கேரளா.

 

Advertisement

நடிகர் ஹரிஷ் உத்தமன் அவர்கள் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு மேக்கப் ஆர்டிஸ்ட் அம்ரிதா என்பவரை திருமணம் செய்து இருந்தார். அவர் மும்பையைச் சேர்ந்தவர்.

ஆனால், திருமணமான ஒரு வருடத்துக்குள் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதைத்தொடர்ந்து அவர் மலையாள நடிகை சின்னு குருவிலா என்பவரை காதலித்துஇரண்டாவது திருமணம் செய்து  கொண்டார்.

Advertisement

நடிகை சின்னு குருவிலா மலையாள நடிகை. இவர் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஃபகத் பாசில் நடிப்பில் தேசிய விருது வென்ற திரைப்படமான ‘நார்த் 24 காதம்’, மம்மூட்டியின் ‘கஸபா’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.

தற்பொழுது நடிகை சின்னு குருவில்லா கர்ப்பமாக உள்ளார். இவரது வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in