TRENDING
6 மாதம் கர்பமாக இருந்த மனைவியை ஓடும் ட்ரைனில் இருந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய கணவன்?… உண்மை என்ன ?… திடுக்கிடும் தகவல்!….

மும்பையை சேர்ந்தவர் சாகர் தோடி (25). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராணி என்ற பெண்ணுடன் சாகர் பழகி வந்த நிலையில் அவர் கர்ப்பமானார். கடந்த 1ஆம்தேதி ராணியை சாகர் திருமணம் செய்து கொண்டார். அவர் முதல் மனைவி சாகருடன் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார். நமக்கு குழந்தை வேண்டாம் எனவும் கர்ப்பத்தை கலைத்து விடுமாறும் ஆறு மாத கர்ப்பிணி ராணியை சாகர் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.
சம்பவத்தன்று இருவரும் இரயிலில் வாசலில் நின்று பயணித்த போது குழந்தை தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த சாகர், ராணியை நெஞ்சு பகுதியில் ஓங்கி அடித்த நிலையில் ஓடும் ரயிலில் இருந்து அவர் கீழே விழுந்தார். ஆனால் இரயில் மெதுவாக சென்று கொண்டிருந்ததால் உயிர் பிழைத்த ராணிக்கு கால்கள், கைகள் மற்றும் கண்களில் காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவத்துக்கு பின்னர் சாகர் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவரை பொலிசார் தேடி வருகிறார்கள். இந்தியாவில் கர்ப்பிணி மனைவியை இரயிலில் இருந்து கணவர் கீழே தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.