TRENDING
அவளை புதைக்கத்தான் முடியும் என்னால் …? அவர்களே எரித்துவிட்டார்கள் ….தூக்கிலிடுங்கள் அதற்காகத்தான் நான் உயிரோடு இருக்கிறேன் …..?

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை சிவம், சுபம் திரிவேதி ஆகிய இருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்கள் அந்த பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் ரீதியான தொல்லைகளை அதிகம் கொடுத்தனர் .பின்பு அவர்களின் தோழர்களும் வரவழைத்து வன்புணர்வு செய்தனர் .இதனை தங்க முடியாத அவர் காவல்துறையின் உதவியை நாடினர் .
பெண் குடுத்த புகாரின் பெயரில் சுபம், சிவம் இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர், சில மாதங்கள் கழித்து சிவம் ஜாமினில் வெளிய வந்தார் ஆனால் சுபம் தப்பித்து விட்டார், அந்த பெண் இந்த வன்புணர்வு புகாரின் காரணமாக நீதிமன்றம் வந்து நடந்ததை கூறும் நிலை வந்தது அதற்காக அந்த பெண் அதிகாலை உன்னவ் ரயில்வே ஸ்டேஷனில் ஏறுவதற்காக காத்துகொண்டு நின்று இருந்தார் .
அப்பொழுது அந்த பெண்ணை சிவம், சுபம் மட்டும் 5 நண்பர்கள் சேர்ந்து அவரை தூக்கிக்கொண்டு ஆல் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு வந்து அவளை அந்த 7 நபர்களும் மீண்டும் வன்புணர்வு செய்து சரமாரியாக அடித்து அவள் மீது பெட்ரோல் உற்றி எரித்து விட்டனர், பின்பு அவளை அங்கு கண்டவர்கள் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர் .
அந்த பெண் போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில் ஏற்கனவே என்னை வன்புணர்வு செய்த இரண்டு நபர்கள், மேலும் 5 நபர்களுடன் என்னை கடத்திகொண்டு சென்று மீண்டும் வன்புணர்வு செய்தனர் என்று வாக்கு மூலம் கொடுத்தால் பின்பு அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். 90 சதவீதம் எரிந்த அவள் உடல் தீவிர சிகிச்சை பலன் இன்றி இன்று உயிர் இழந்தால் .
அவளது சடலத்தை அடக்கம் செய்ய அவளது சகோதரன் உடலை பெரும் பொழுது செய்தியாளரிடம் அந்த 7 நபர்கள் என் தங்கையின் வாழ்வயே நாசம் ஆக்கிவிட்டார்கள் அவர்களை தூக்கிலிட்டு சாகடியுங்கள் இதற்காகவாது நான் உயிரோடு இருக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க பேசினார். என் தங்கையின் உடலை அடக்கம் தான் செய்ய வேண்டும் எரிப்பதற்கு அவள் உடலில் ஒன்றும் இல்லை என்று அழுது கொண்டு பேசினார்.