இந்த மனசு யாருக்கு வரும்?…. பிக்பாஸ் பரிசு தொகையில் பாதியை அப்படியே தூக்கிக் கொடுத்த அசீம்…. எதற்காக தெரியுமா….???? – cinefeeds
Connect with us

VIDEOS

இந்த மனசு யாருக்கு வரும்?…. பிக்பாஸ் பரிசு தொகையில் பாதியை அப்படியே தூக்கிக் கொடுத்த அசீம்…. எதற்காக தெரியுமா….????

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற இறுதியாக விக்ரமன், ஷிவின், அசீம் ஆகிய மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இருந்தனர். இவர்களில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் தட்டி தூக்கினார். அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு மற்றும் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் அசீம் தனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அதில் ஒரு முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். அதாவது அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது தனக்கு கிடைக்கும் பரிசு தொகையில் பாதியை கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்புக்காக செலவிடுவேன் என கூறி இருந்தார்.

Advertisement

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்ற பிறகு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனக்கு கிடைத்த பரிசு தொகையில் பாதியை கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்புக்காக செலவிடப் போகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

MOHAMED AZEEM இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@actor_azeem)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in