DISTRICT NEWS
“நீ என்ன போலீஸா..?!” டிராஃபிக் காவலரை காது கூசும் கெட்ட வார்த்தைகளால் வறுத்தெடுத்த இளம் பெண்கள்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!
திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே உள்ள காவாங்கரை சிக்னல் பகுதியில், மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளம் பெண்கள் விபத்து ஏற்படுத்தியதோடு, நடுரோட்டில் போக்குவரத்தை முடக்கிப் பெரும் ரகளையில் ஈடுபட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. GNT சாலையில் இன்று மாலை அசைந்தாடி வந்த அந்தப் பெண்கள், சக வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துப் போலீஸார் தட்டிக்கேட்டபோது, தங்களது போதை வெறியில் அந்த இரு பெண்களும் காது கூசும் அளவுக்குக் கெட்ட வார்த்தைகளால் அனைவரையும் வசைபாடிச் சண்டையிட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த டிராஃபிக் போலீஸாரை ஒருமையில் பேசியதுடன், “நீ என்ன போலீஸா?” என்று சவால் விட்டு அவர்கள் நடத்திய இந்த நடுரோட்டு நாடகம் ஒட்டுமொத்தப் பகுதியையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
பொதுமக்கள் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றபோதும், அந்தப் பெண்கள் நடுச்சாலையிலேயே அமர்ந்து போராட்டம் செய்ததால் அப்பகுதியில் பல மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டனர். இந்த அநாகரிகமான ரகளை குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் ‘மாற்றம்’ என்ற பெயரில் தற்கால இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலாச்சாரச் சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதையே இந்தச் சம்பவம் காட்டுவதாகப் பலரும் தங்களது ஆதங்கத்தைப் பதிவு செய்து வருகின்றனர். பொதுமக்களுக்கும், நெறிமுறை காவலர்களுக்கும் அச்சுறுத்தலாக நடுரோட்டில் சட்டம் ஒழுங்கைக் கையில் எடுத்த அந்த இரு பெண்கள் மீதும் காவல்துறை உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் ஆக்ரோஷமாக வலியுறுத்தி வருகின்றனர்.
